எழுத்தாளர் இமையம் அவர்களின் இந்த புதினம் (நாவல் ) சாஹித்ய அகாடமி விருது 2020 பெற்ற நூலாகும் . சென்ற ஆண்டு பெரிதாக நூல்கள் உலகினுள் பயணம் செய்ய முடியாமல் இருந்தது. இந்த முறை அதை மாற்றிப் பார்க்க, நினைத்து தேடிய போது இந்த புதினம் சேர்ந்தேன். சில புதினங்கள் நீண்ட பயணம் கொண்டவை. சில புதினங்கள் சிறியதாக இருந்தாலும் அது பேசும் வாழ்வியலும், நெறியும் மிகப் பெரியவை. கதைச்சுருக்கம்: ரேவதி - படித்த பெண். பொறியியல் பட்டதாரி. வீட்டிற்கு ஒரே பெண். அவளின் உலகம் இதுவே. அப்பா- நடேசன். அம்மா-அமராவதி. அண்ணன் -முருகன் தோழி -அருண்மொழி. இன்னொரு புறம் - ரவி. ரவி- பர்மாவில் இருந்து இந்தியா வந்தவன். ஆட்டோ ஓட்டுகிறான். அவனின் குடும்பத்தில் அப்பா கணபதி, அம்மா கோமதி, அக்கா பிரியங்கா. இந்த இருதுருவங்களிடையே காதல் மலர்கிறது. அதின் பின் ஒரு சாமானியனின் வாழ்வில் காதல் மலர்ந்தால் நடைபெறும் அனைத்தும் இங்கேயும் அரங்கேறுகின்றது. ரேவதியின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் நிகழ்வும் பின்தொடர்கிறது. எழுத்தாளரின் படைப்புத் திறன்: எப்போது பார்த்தாலும் நடக்கும் காதல் கதை தானே. ஊர் உலகிற்கு பெரிதாக தெரியாத ஒன்றைய...