செல்லாத பணம் - இமையம் (நூல் ஒரு பார்வை)
எழுத்தாளர் இமையம் அவர்களின் இந்த புதினம் (நாவல் ) சாஹித்ய அகாடமி விருது 2020 பெற்ற நூலாகும் .
சென்ற ஆண்டு பெரிதாக நூல்கள் உலகினுள் பயணம் செய்ய முடியாமல் இருந்தது.
இந்த முறை அதை மாற்றிப் பார்க்க,
நினைத்து தேடிய போது இந்த புதினம் சேர்ந்தேன்.
சில புதினங்கள் நீண்ட பயணம் கொண்டவை.
சில புதினங்கள் சிறியதாக இருந்தாலும் அது பேசும் வாழ்வியலும், நெறியும் மிகப் பெரியவை.
கதைச்சுருக்கம்:
ரேவதி - படித்த பெண். பொறியியல் பட்டதாரி. வீட்டிற்கு ஒரே பெண்.
அவளின் உலகம் இதுவே.
அப்பா- நடேசன்.
அம்மா-அமராவதி.
அண்ணன் -முருகன்
தோழி -அருண்மொழி.
இன்னொரு புறம் - ரவி.
ரவி- பர்மாவில் இருந்து இந்தியா வந்தவன். ஆட்டோ ஓட்டுகிறான்.
அவனின் குடும்பத்தில் அப்பா கணபதி, அம்மா கோமதி, அக்கா பிரியங்கா.
இந்த இருதுருவங்களிடையே காதல் மலர்கிறது. அதின் பின் ஒரு சாமானியனின் வாழ்வில் காதல் மலர்ந்தால் நடைபெறும் அனைத்தும் இங்கேயும் அரங்கேறுகின்றது.
ரேவதியின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் நிகழ்வும் பின்தொடர்கிறது.
எழுத்தாளரின் படைப்புத் திறன்:
எப்போது பார்த்தாலும் நடக்கும் காதல் கதை தானே. ஊர் உலகிற்கு பெரிதாக தெரியாத ஒன்றையா இந்த நாவல் சொல்லப்போகிறது என்ற எண்ணம் தோன்றுவது இயல்புதான்.
ஆனால் இந்தக் கதையில் பெண்களின் உணர்வு சார்ந்த நகர்வுகள் அதிகம் உள்ளது.
சமூகம்,சாதி, குடும்பத்தின் வரைமுறைகள், சமூக நிலை இப்படி பல பரிணாமங்கள் இருந்தாலும் பெண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியும் இங்கே இமையம் அவர்கள் பதிவு செய்கிறார்.
அமராவதி, ரேவதி, பிரியங்கா, கோமதி என பெண் கதாபாத்திரங்களின் வடிவமைப்பே அதற்கு சான்று.
நடேசனின் வரட்டுப்பிடிவாதம், முருகனின் கோபம், ரவியின் பொறுப்பற்ற குணம் என ஆண் கதாபாத்திரங்கள் தோற்றுப்போகையில் அதை உடைத்து சரி செய்து தூக்கி நிறுத்த ஒருவன் மட்டுமே இருக்கிறான் அது ஆனந்தகுமார்.
அதிகாரம் கொண்டு இருந்தாலும் மனிதாபிமானத்தில் உயர்ந்து நிற்கிறான்.
அருண்மொழியும் , ரவியும் பேசிக் கொள்ளும் இடம் யதார்த்தமான பதிவு.
இமையம் அவர்கள் சமூகத்தின் முக்கியமான அவலத்தை முன்வைக்கிறார்.
மையக் கருத்து:
இந்த நாவல் கூறும் முக்கியமான அறம்:
"எத்தனை செலவு ஆனாலும் பரவாயில்லை".
என்ற வரி நாவலின் வழி நெடுக இருக்கும்.
இங்கே "பணத்தை" தாண்டிய பலவும் இருக்கின்றது.
அன்பு செலுத்துவதும், மனிதம் போற்றுவதும்❤️
அடுத்ததொரு பதிவினில் சந்திப்போம்.
நூல் : செல்லாத பணம்
பதிப்பகம் : க்ரியா
நூலின் கருத்து : ©இமையம்
நூல் பற்றிய ஆய்வு : ©M. பிரனேஷ்
Thank you for your information.
ReplyDeleteThis information was very useful to know about outline of the novel and also known the characters, money and apart from money which is predominant theme of the novel .